எதுவும் தெரியாமல் ஆழ் கடலில் நீச்சலடித்தவர்…. பின்னால் வந்த சுறா: பயங்கரமான ட்ரோன் காட்சிகள்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கடல்சறுக்கு வீரர் மாட் வில்கின்சனுக்கும், பயங்கரமான சுறா ஒன்றிற்குமிடையிலான எதிர்பாராத நெருக்க காட்சிகள் வெளியாகியுள்ளன. ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில், வில்கின்சனை வெள்ளைச்சுறா நெருங்கி பின்னர் விலகிச் செல்லும் வியத்தகு காட்சி பதிவாகியுள்ளது.

சிட்னிக்கு வடக்கே 733 கிமீ (455 மைல்) தொலைவில் உள்ள ஷார்ப்ஸ் கடற்கரையில் நேற்று (7) இந்த சம்பவம் நடந்தது. கடல் சறுக்கலில் ஈடுபட்ட பின்னர் அவர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போது, அவர் கடல் சறுக்கிற்கு பயன்படுத்தும் சர்போர்டின் கீழ் சுறா வந்து சென்றது .

வில்கின்சனின் கால் பக்கமாக வந்த வெள்ளைச்சுறா, 1.3 மீட்டர் (ஐந்து அடி) நெருங்கி விலகிச் சென்றது.

சுறா நெருங்கியதை அவர் அறிந்திருக்கவில்லை. ஏதோ சத்தம் கேட்டதை உணர்ந்தார், பின்னர் அவருக்கு தகவல் வழங்கப்பட்ட பின்னரே, சுறா நெருங்கிச் சென்ற விபரத்தை அறிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here