சிலாபத்தில் ஒருவருக்கு கொரோனா!

சிலாபம், அம்பகதவில பி​ரதேசத்தில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இன்று (08) உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் வேறு ஒரு நோய்க் காரணமாக​வே நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சிலாபம் வைத்திசயாலைக்கு சென்றிருந்தாகவும், அதன்போது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உள்ளதென உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவரது வீட்டிலிருந்த குறித்த நபரை உடனடியாக வைத்திசாலை அம்யூலன்ஸ் வண்டியொன்றில் ஏற்றி இரணவில கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்திருந்தாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதனைடுத்து, இவர் தொடர்பாக தேடியறிந்துள்ள சுகாதார அதிகாரிகள், அம்பகதவில பி​ரதேசத்திலுள்ள தேவாலயம் ஒன்றின் இரு பாதிரியார்கள் உள்ளடங்களால் அந்த பிரதேசத்திலுள்ள ஐந்து குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here