முச்சக்கர வண்டியில் 2 பயணிகளையே ஏற்றலாம்; ஏனைய வாகனங்களிற்கும் கட்டுப்பாடுகள்: அரசின் புதிய வழிகாட்டல் குறிப்புக்கள்!

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தனியார் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் கார் மற்றும் முச்சக்கர வண்டியில் அதிகபட்சம் இரண்டு பயணிகளை மட்டுமே ஏற்ற முடியும்.

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் வாகனங்களில், மொத்த திறனில், 50 சதவீதத்தை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

கூடுதலாக, உள்ளக, வெளியக விளையாட்டுக்கள், பேரணிகள்,  பொதுக்கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்க்கள், கசினோக்கள் மற்றும் கிளப்புகள், சூதாட்டங்கள், மசாஜ் பார்லர்கள்  திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் ஒக்டோபர் 31 வரை செல்லுபடியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here