பொலிஸ் நிலையம் லொக் டவுன்!

மினுவாங்கொட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அனைவரும், பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட பொலிஸ் நிலைய சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபரின் மகன் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர். அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

தற்போது, வெளியாட்கள் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here