கிளிநொச்சியில் அரச காணியை அபகரிக்க முயன்றவரால் பரபரப்பு!

அரச காணி ஒன்றினை தனிநபர் ஒருவர் காடுகளை அழித்து சுவீகரிக்க முயன்றதற்கு
எதிராக கிளிநொச்சியில் இன்றைய தினம் மக்கள் எதிர்ப்பினை
வெளியிட்டிருந்தனர்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உட்பட்ட இயக்கச்சி முகாவில்
கிராமசேவகர் பிரிவில் உள்ள பத்தாவல கிராமத்தில் உள்ள அரச காணி ஒன்றினை
காடுகளை அழித்து தனி நபர் ஒருவர் சுவீகரிக்க முயன்றுள்ளதாக கூறி பத்தாவல
கிராம மக்கள் இன்று காலை குறித்த பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கையினை
வெளியிட்டு இருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக பளை போலீசார் அறிந்ததை அடுத்து சம்பவ
இடத்திற்கு விரைந்துடன், பொதுமக்களுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
கலந்துரையாடி அரச காணியை சுவீகரிப்பதாக கூறப்படும் நபரை அழைத்து குறித்த
காணி அரச காணி என கிராம மக்கள் குறிப்பிடுகின்றார்கள் இதுகுறித்து
பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிய பின்பு குறித்த காணியை
துப்பரவு செய்யும் படி கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் அவர்களிடம் வினாவிய போது தனிநபர்கள் அரச காணிகளை அடாத்தாக பிடிக்கும் செயற்பாடு என்பது சட்ட விரோதமான செயற்பாடாகும். குறித்த விடயங்கள் தொடர்பாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்படுவதை அடுத்து போலீசார் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here