முல்லைத்தீவில் அகழப்பட்டது புலிகளின் ஆயுதக்கிடங்கா?

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தனிநபர் ஒருவருடைய காணியில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் இணைந்து இந்த அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் குறித்த பகுதியில் எந்தவிதமான பொருட்களும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வுப்பணி தோல்வியில் முடிவடைந்தது.

முல்லைத்தீவில் யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை குறித்த நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இருப்பினும் தோண்டும் இடங்களில் எதுவுமே கிடைக்கப்பெறாமல் தோல்வியில் அகழ்வுப்பணி முடிவடைவதே வழமையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here