மதுபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கடத்தி வல்லுறவு: கல்லடி பாலத்திலிருந்து குதித்து யுவதி தற்கொலை முயற்சி!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாலியல் வல்லுற்குள்ளாக்கப்பட்ட 17 வயது மாணவி, வைத்தியசாலையிலிருந்து தப்பித்து கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார்.

இதன்போது, மாணவியை அங்கிருந்த இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர். சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேரை இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்த 17 வயது மாணவியும், 22 வயதுடைய ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி இரவு 11 மணியளவில் மாணவியையை அலைபேசியில் அழைத்த காதலன், வீட்டில் இருந்து வெளியில் வருமாறு கூறியுள்ளார்.

மாணவி வீட்டின் வெளிப்பகுதில் நின்றிருந்தபோது, மதுபோதையில் காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் வந்துள்ளனர்.

மாணவியை வீதிக்கு வருமாறு அழைத்தபோது அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் காதலனின் நண்பர்கள் இருவர் மாணவியின் வாயை பொத்தி அவரை தூக்கி கொண்டு அருகிலுள்ள காட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மாணவியின் காதலன் முதலில் பாலியல் பலத்தாரம் செய்துள்ளார். இதனையடுத்து, அவரின் நண்பன் ஒருவன் மாணவியை பலாத்தகாரம் செய்ய முற்பட்டபோது மாணவி அவனின் கையை கடித்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு தப்பிஓடியுள்ளார்.

பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here