தொழில் பட்டறை தீக்கிரை!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிச்சேனை தச்சு தொழில் பட்டறையில் நேற்று (புதன் கிழமை) இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பல இலட்சம் ரூபா பெறுமதியான மரத் தளபாடங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஆலையில் 12 தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாகவும் இவ்விபத்தினால் தங்களது நாளாந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தடவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here