A/L, புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளிற்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

க.பொ.உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிற்கான சில வழிகாட்டல் குறிப்புக்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் தமது சீருடையின் இடது பக்கத்தில் தமக்கு வழங்கப்பட்ட பரீட்சை இலக்கத்தை பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் 8.45 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபங்களிற்கு சமூகமளித்து, 9 மணிக்கு முன்னதாக தமக்குரிய ஆசனங்களில் அமர வேண்டும்.

இடைவேளைகளில் கூட பெற்றோர் பரீட்சை மையங்களிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

புலமைப்பரிசில் பரீட்சை வரலாற்றில் இம்முறையே மாணவர்களிற்கு நுழைவு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் தேவையானவர்கள் 1911 ஹொட்லைனைத் தொடர்புகொள்ள முடியும்.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுபவர்கள் காலை 7.30 மணிக்கு முன்னதாக பரீட்சை மையங்களிற்கு சென்று விட வேண்டும். 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here