கிளிநொச்சியிலும் புகையிரதம் மோதி ஒருவர் பலி: அடையாளம் காண உதவுங்கள்(PHOTOS)

புகையிரத்துடன் மோதுண்டு 45 வயது மதிக்கதக்க ஆணொருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலத்தை புகையிரத ஊழியர்கள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்ததை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் கிடைக்காத நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here