விமானத்தில் குழந்தை பிரசவித்த பெண்!

எல்ஹி-பெங்களூரு விமானத்தில் பயணித்த பெண்ணொருவர், விமானத்திலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 4.40 மணிக்கு புறப்பட்ட இண்டி-கோ விமானம் 6 E 122 இல் பயணித்த கர்ப்பிணி பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

விமானித்தில் பயணித்த வைத்தியர் ஒருவர், விமான பணியாளர்கள், சில விமான பயணிகளுடன் உதவியுடன் அந்த பெண் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்தார்.

விமானத்திற்குள் உடனடியாக ஒரு மறைப்பு பகுதி ஏற்படுத்தப்பட்டு, பிரசவம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு அவர் குழந்தையை பெற்றெடுத்தார்.

இரவு 7.30 மணியளவில் விமானம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் தாய்க்கும், பிள்ளைக்கும் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here