ஆடைத் தொழிற்சாலை தொற்று எண்ணிக்கை 1,034!

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் நேற்று மட்டும் மொத்தம் 207 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில் 202 பேர் மினுவாங்கொட தொற்றுடன் தொடர்புடையவர்கள்.

அதில், 199 பேர் பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள்.

இதற்கிடையில், ஆடை தொழிற்சாலைகள் வெலிசறை கிளையில் இருந்து மேலும் ஒரு தொற்று அடையாளம் காணப்பட்டது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஒரு பணியாளரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மீதமுள்ள ஐந்து தொற்றாளர்களும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். ரஷ்யாவிலிருந்து திரும்பிய 3 பேர், இந்தியாவிலிருந்து திரும்பிய 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி இலங்கையில் பதிவான மொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 4,459 ஆக உள்ளது.

1,172 பேர் வைத்தியசாலைகளில் சிகிசிசை பெற்று வருகின்றனர். 3,274 பேர் குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here