கெட்டுப்போன மாமிசத்தை எரிப்பதாக கூறி காதலியை கொலை செய்து எரித்த காதலர்!

கெட்டுப்போன மாமிசத்தை எரிப்பதாக கூறி காதலியை கொலை செய்து எரித்த காதலரை பொலிசார் கைது செய்து உள்ளனர்.

துருக்கியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர் 27 வயதான பினார் குல்டெக். அவரை கடந்த சில நாட்களாக காணவில்லை.

இந்த நிலையில் துருக்கியின் மென்டீஸ் பகுதியில் பினார் தனது காதலரால் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

சம்பவத்தன்று 32 வயதான செமல் மெடின் அவ்சி என்பவர் துண்டு துடான மாமிசங்களை எரித்து உள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த அவரது சகோதரர் மெர்ட்கன் அவ்சி கெட்ட வாடை வருகிறது என்ன காரணம் என்ன என கேட்டு உள்ளார்.

அதற்கு, கெட்டுப்போன மாமிசம் என தனது சகோதரரிடம் கூறி உள்ளார் செமல் மெடின் அவ்சி.

ஆனால் அறியப்படும் பெண்ணியவாதியான பினார் குல்டெக்கின் மாயமான விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே விசாரணை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மெர்ட்கன் அவ்சியின் மொபைல் அழைப்புகளை கண்காணித்து, பின்னர் கைது செய்துள்ளனர்.

மெர்ட்கன் அவ்சி விசாரணை அதிகாரிகளிடம் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை வாக்குமூலமாக அளித்துள்ளார். மட்டுமின்றி, கெட்டுப்போன மாமிசத்தை எரித்ததாக தனது சகோதரர் தெரிவித்ததில் சந்தேகம் ஏது எழவில்லை எனவும் கூறி உள்ளார்.

தனது சகோதரரின் மதுபான விடுதியில் உள்ள குளிர்பதனப் பெட்டி சேதமடைந்துள்ளதால், அதில் இருந்த மாமிசம் கெட்டுப்போனது தமக்கு தெரியும் என்பதால் சகோதரர் மீது சந்தேகம் எழவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜூலை 21 ஆம் திகதி செமல் மெடின் அவ்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பாகசகோதரர்கள் இருவரும் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் துருக்கியில் 27 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 23 பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here