கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்!

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ராகம வைத்தியாசலையில் சிகிச்சைகளுக்காக நேற்று பிற்பகல் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும், நேற்று இரவு அவர் தப்பியோடியுள்ளார்.

தப்பிச்சென்றுள்ள கொரோனா தொற்றாளரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு தப்பிச்சென்ற நபர் இலக்கம் 307 பேலியகொட வத்தளை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபருக்கு நேற்று இரவு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

குறித்த நபர் போதைப்பொருள் பாவனையுடையவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார், போதைப்பொருள் பாவனையின் நிமித்தம் அவர் இவ்வாறு தப்பிச்சென்றிருக்கலாமென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here