கட்டுநாயக்க விமான நிலைய பணியாளருக்கு கொரோனா!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்பரவு பிரிவில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் சந்திக பந்தரா விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

சிலாபத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் நேற்று மாலை (06) நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சோதனைகளின் முடிவுகள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் மேலதிக சிகிச்சைக்காக ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here