மன்னார் மாவட்டத்திலும் தனியார் கல்வி நிலையங்கள் மூடல்; பொதுமக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

மன்னார் மாவட்ட மக்கள் முகக்கவசம் அணிந்து உரிய சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக தமது பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவை பிரதி நிதிகளுடன் இன்றைய தினம் புதன் கிழமை (7) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறிப்பாக நேர மாற்றம் மற்றும் கொரோனா தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.குறித்த கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக கொரோனா தொடர்பான விழிர்ப்புணர்வு மிக முக்கியமாக காணப்படுகின்றது. கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்ற சூழ்நிலையில் தற்போது போக்குவரத்தினுடாகவும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து சேவையினை மேற்கொள்ளுகின்றவர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வாழிகாட்டல்கள் போக்கு வரத்து துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

-பயணிகள் முகக்கவசம் அணிந்து சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

எனவே மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட வேண்டும்.

பொது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.நேர மாற்றம் தொடர்பாக மன்னார் மாவட்ட தினியார் மற்றும் இலங்கை அரச போக்குவரத்து சேவை பிரதி நிதிகளுடன் கடலந்துரையாடலை மேற்கொண்டோம். எனினும் முறையான தீர்வு எட்டப்படவில்லை.

கலந்து கொண்ட இலங்கை அரச போக்குவரத்து சேவை பிரதி நிதிகள் தாங்கள் எந்த வித தயார் படுத்தலும் இல்லாமல் வருகை தந்ததாக தெரிவித்தனர். இந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர் வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி குறித்த கூட்டம் மீண்டும் இடம் பெற உள்ளது.

-அதன் பின்னர் கூட்டத்தை கூடி தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இராணுவம்,பொலிஸ் கடற்படை அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளோம். மக்களின் அச்ச நிலையை தனித்து சுமூகமான ஒரு நிலையை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here