கம்பஹா போய்வந்த உத்தியோகத்தர்கள்: யாழ் மாநகரசபையில் கிருமிநீக்கம்!

கம்பஹா மாவட்டத்தில் வியாங்கொடைப் பகுதியில் நடைபெற்ற விழிப்புலனற்றோருக்கான செயலமர்வு ஒன்றில் பங்குபற்றியிருந்த யாழ்.மாநகர சபைச் சேர்ந்த பணியாளர்கள் இருவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வியாங்கொடை செயலமர்வில் கலந்து கொண்டிருந்த பணியாளர்கள் திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்பியிருந்தனர்.

கம்பஹா மாவட்டம் ஆபத்தான வலயமாக உருவாகியுள்ளதால், இன்று கடமையிலிருந்த பணியாளர்கள் விடுமுறை வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாழ்.மாநகர சபை வளாகத்தினை முற்று முழுதாக தொற்று நீங்கம் செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here