நுவரெலியா நகரில் களியாட்ட நிகழ்வுகள் உடனடியாக நிறுத்தம்

நுவரெலியா நகரில் களியாட்ட நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துமாறு நுவரெலியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா நகரில் உல்லாச பயணிகள் அதிகமாக வருகை தரும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. உதாரணமாக கிரகரி வாவி கரையில் அதிகமான சுற்றுலா பயணிகள் குவியும் இடமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை செவ்வாய்கிழமை (6) முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா கிரகரி வாவியில் நடைபெற்றுவரும் படகு சேவை மற்றும் கிரகரி வாவி கரையில் நாடத்தப்பட்டு வந்த மட்டக்குதிரை சவாரிகள், துவிச்சக்கரவண்டி சவாரிகள் மற்றும் காணிவேல் களியாட்ட நிகழ்வுகளும் நேற்று முதல் நிறுத்தப் பட்டுள்ளது.

அதேவேளை மட்ட குதிரை சவாரி, துவிச்சக்கரவண்டி சவாரி, காணிவேல் களியாட்ட விழா நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கிரகரி பூங்காவும் கிரகரி வாவி கரையிலுள்ள வாகன தரிப்பிடமும் வெறிச்சோடி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here