கிளிநொச்சியில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது!

பரந்தன் உமையாள்புரம் பகுதியில் வனவளத் திணைக்களத்தினால் இன்று அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார்.

மொத்தமாக 344 ஏக்கர் வரையான வீஸ்தீரணமுடைய காணிகளை-.
மயானம், நெல் காயவிடும் தளம், பொதுமக்களின் வீடுகள், வயல்கள் உள்ளடங்கலாகவே உள்ள காணிகளையே சுவீகரிக்க முயற்சித்துள்ளனர்.

இவற்றுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வைத்துள்ள மக்கள் கடந்த 30 வருடங்களாக வயல்களை விதைத்து வருகின்றனர். எனினும், தொடர்ந்து வயல் விதைத்தால் கைது செய்யப்படுவார்கள் என்று வனவளத்திணைக்களத்தினர் அச்சுறுத்தல் விடுத்தனர்.

குறித்த விடயம் உடனடியாக பிரதேச செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த சுவீகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் பிரதேச சபையின் தவிசாளருடன் திருச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here