‘பெண்ணாசையிலேயே சூளைமேடு துப்பாக்கிச்சூடு… இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’: டக்ளஸிற்கு விடுதலைப் புலிகள் கடைசி எச்சரிக்கை!

தியாகி திலீபன் தொடர்பில் சர்ச்சைக்குரிய விதமாக பேசி, தமிழ் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வாங்கு வாங்கென வாங்கியுள்ளார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா.

நேற்று (6) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த ஒரே நபர் தியாகி திலீபன்தான் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் காலத்தில்தான் கஞ்சா, போதைப்பொருள் பாவனை இருக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஒழுக்கம் மிக்கவர்கள் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எம்முடன் போரிட்டவர்களே இப்படி புலிகளை புகழாரம் சூட்டுகிறார்கள். ஆனால் நீர்- டக்ளஸ் தமிழனாக இருந்து கொண்டு- தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளை கேவலமாக பேசுகிறீர்கள். மக்கள் அஞ்சலி செலுத்த விரும்பினால், அதை பிரதமரின் முன்பாக கூற வேண்டியதுதானே. புத்தி கெட்ட டக்ளஸ் தேவானந்தாவே, என்னுடைய தாத்தாவை, ஒன்றுவிட்ட தம்பியை ஈபிடிபிதான் சுட்டது, தம்பியை கடத்தியது ஈபிடிபிதான் என என்னால் சொல்ல முடியும்.

தம்பியை திலீபன்தான் கொன்றது என சும்மா பூச்சுத்தக் கூடாது. ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவிற்கு, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளான நாம் கடைசி எச்சரிக்கை விடுக்கிறோம்.

இன்றும் தமிழ் மக்கள் ஈ.பி.டி.பியை பார்த்து அச்சப்படுகிறார்கள். கடத்துவார்கள், கொலை செய்வார்கள் என அச்சப்படுகிறார்கள்.

ஒட்டுக்குழுக்கள், தேசத்துரோகிகளை நாடாளுமன்றம் அனுப்புவதை பற்றி மக்கள் யோசிக்க வேண்டும்.

கடந்த மஹிந்த காலத்தில் டக்ளஸ் தேவானந்தாவாகிய நீர் என்ன செய்தீர்? தீவகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்தவர்களை கடற்படை பார்த்திருக்க எத்தனை பேரை வெட்டினீர்கள். இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அதில் சம்பந்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். செய்வதையெல்லாம் செய்து விட்டு, திலீபன் அண்ணாவையா கொலையாளியென்கிறீர்கள்?

திருகோணமலையில் காணாமல் போனவர்களை, யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை டக்ளசுடன் கதைத்து எடுக்கலாமென்ற நிலைமையிருந்தது. காணாமல் போன பட்டியலில் உள்ளதில் 99 வீதமானது ஒட்டுக்குழுக்கள் என்ற ரீதியில் டக்ளஸ் தேவானந்தாவை சாரும்.

1985ஆம் ஆண்டு பெண்ணாசையில் சூளைமேட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். பெண்ணாசையில் இன்றும் கொலைக்குற்றவாளி.

நீங்கள் செய்வதையெல்லாம் செய்து விட்டு, உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த திலீபன் அண்ணாவை கொலையாளியென்கிறீர்கள். மண்டையில் என்ன மசாலாவா இருக்கிறது?

புலிகள் சுட்டார்கள்தான். துரோகிகளைத்தான் சுட்டோம். டக்ளஸ் தேவானந்தாவால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ஆயிரக்கணக்கானவர்களின் பட்டியலை எம்மால் தயாரிக்க முடியும். அதை நாம் ஐ.நாவிற்கு அனுப்புவோம்.

மக்கள் உங்களை மறக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு தேவைக்கு தெரிவு செய்துள்ளார்கள். அதை மட்டும் செய்யுங்கள்.

டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் செய்த கொலை, கற்பழிப்பு, கடத்தல் பற்றிய தகவல்களை திரட்டி, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here