கிளிநொச்சி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிளிநொச்சி உருத்திரபுரத்தினை சேர்ந்த பாலசுப்பிரமணியம் பாணுசன் என்ற 11 வயதுடைய சிறுவன் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு குளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (6) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை விடுமுறை காரணமாக வள்ளிபுனத்தில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு சொன்றுள்ளார்கள். சிறுவர்களுடன் நாவல் பழம் ஆய்வதற்காக இடைக்கட்டு பகுதியில் சிறுவர்களுடன் சென்று, நாவல்பழம் பறித்து சாப்பிட்டுவிட்டு இடைக்கட்டு குளத்தில் குளிக்க சென்றவேளை நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனுடன் சென்ற ஏனைய சிறுவர்கள் அயலவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இளைஞன் மூங்கிலாறு ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சிறுவனின் உடலம் மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here