இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பண்டாரவளை விசேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிமட நீதிமன்ற வளாகத்தில் வைத்து 3 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாக பெற்ற போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரிடம் வெலிமட நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழங்கு ஒன்றிற்கு அரச சாட்சியாளராக பெயரிடவும் மற்றும் முறைப்பாட்டாளர் தொடர்பில் கேகாலை நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஒன்றில் இருந்து அவரை விடுதலை செய்வதாக கூறியும் குறித்த உபபொலிஸ் பரிசோதகர் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here