புங்குடுதீவு யுவதியுடன் பயணித்தவர்கள் தயவு செய்து தகவல் தாருங்கள்!

யாழ்மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த 3ம் திகதி இரவு 8.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை பஸ்நிலையத்தில் இருந்து ரண்சிலு (Ransilu) எனும் WP ND 6503 இலக்கமுடைய தனியார் பேருந்தில் யாழ் நோக்கி பயணித்துள்ளார். இப்பேருந்து புத்தளத்தில் பழுதடைந்த பின்னர் கொழும்பிலிருந்து பருத்துறை நோக்கி வருகை தந்த பருததித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு சொந்தமான ND 9776 இலக்க பேருந்தில் புத்தளத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு கொடிகாமத்தை 4ம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு வந்தடைந்துள்ளார். அதன் பின்னர் கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இன்னொரு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.20 மணிக்கு WP JX 6508 இலக்க தனியார் பேருந்தில் புங்குடுதீவிற்கு பயணித்துள்ளார்.

மேற்படி பஸ்வண்டிகளில் இவருடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரவும்.
இதன் மூலம் தங்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்.

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here