யாழ், மட்டக்களப்பு புகையிரதங்கள் சில இடங்களில் நிற்காது!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மினுவாங்கொட பகுதிகளில் புகையிரதங்கள் நிறுத்தப்படாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் மட்டக்களப்பு பிரதான வழித்தடங்களில் பயணிக்கும் புகையிரதங்கள் யாகொட மற்றும் வதுரவ நிலையங்களுக்கு இடையில் நிறுத்தப்படாது.

கம்பஹா, பெம்முல்ல மற்றும் வெயாங்கொட நிலையங்களிலும் புகையிரதங்கள் நிறுத்தப்படாது என்று புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

எனினும், புத்தளம் மார்க்கத்தில் இயக்கப்படும் புகையிரதங்களின் வழக்கமான பணி பாதிக்கப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here