அடுத்த மாதம் காஜல் அகர்வாலிற்கு திருமணம்!

தொழில் அதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

காஜல் அகர்வால் தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலுக்கு 2013இல் திருமணம் நடந்தது. தொடர்ந்து காஜலுக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் திருமணத்தை தள்ளிவைத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தினார்.

தற்போது காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. அவருக்கு திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தொழில் அதிபர் ஒருவரை அவர் காதலிப்பதாகவும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் பேசப்பட்டது.

அது தற்போது உறுதியாகியுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம், மிக நெருங்கியவர்களுடன், மும்பையில் நிச்சயதா்த்தம் நடந்ததை, காஜல் தரப்பு உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிவாகி விட்டதாக நேற்று தகவல் வெளியானது. மணமகன் பெயர் கவுதம் கிச்சுலு என்றும் கட்டிடங்களில் உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்கிறார்.

மகாராஷ்டிராவில் ஒரு திராட்சைத் தோட்டம் அல்லது மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது. விருந்தினர் பட்டியலில் சுமார் 50 பேர் இருப்பார்கள். மணமகனும், மணமகளும் இரு தரப்பிலிருந்தும் குடும்ப உறுப்பினர்களைத் தவிர கஜலின் நெருங்கிய நண்பர்கள் சிலர் கலந்துகொள்வார்கள்.

கொரோனா காரணமாக, காஜல் பலரை அழைக்கவில்லை. திரைப்படத் துறையைச் சேர்ந்த அவரது நண்பர்களிற்காக, ஆனால் அடுத்த ஆண்டு மும்பையில் ஒரு வரவேற்பை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

ஹைதராபாத் டைம்ஸ் காஜலின் தந்தை வினய் அகர்வாலை இது தொடர்பில் வினவியபோது- “இப்போது எதுவும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நேரத்தில், இதைப் பற்றி என்னால் பேச முடியாது“ என மறுத்துள்ளார்.

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்திலும் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here