புங்குடுதீவு யுவதி பருத்தித்துறை பேருந்திலும் பயணம் செய்துள்ளார்!

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்குள்ளான யுவதி, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்தபோது, பருத்தித்துறை பேருந்திலும் பயணித்த விடயம் வெளியாகியுள்ளது.

கொழும்பிலிருந்து அவர் புறப்பட்ட பேருந்து புத்தளத்தில் பழுதடைந்த நிலையில், நள்ளிரவு 12.30 மணியளவில் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்தில் ஏறி, கொடிகாமத்தில் அதிகாலை 4.30 மணிக்கு இறங்கி வேறு பேருந்தில் யாழ் சென்றுள்ளார்.

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, கொடிகாமத்தில் புங்குடுதீவு யுவதியை இறக்கி விட்டு, பருத்தித்துறை நோக்கி சென்றுள்ளது.

கொடிகாமத்தில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வேறு ஒரு பேருந்தில் ஏறி, யாழ் பேருந்து தரிப்பிடத்தில் இறங்கிய பெண், மீண்டும் புங்குடுதீவுக்கு இன்னொரு பேருந்தில் பயணித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பருத்தித்துறை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்தவர்கள் தொடர்பில் கடுமையான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. ஏனைய பேருந்து சாரதி, நடத்துனர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.

அவ்வாறு பயணித்தவர்கள் 021 222 6666 என்ற வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிமணை இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here