கரைச்சி பிரதேசசபை தவிசாளர் மீது தாக்குதல்: காரணம் என்ன தெரியுமா?

கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேலமலிகிதன் மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். நேற்றிரவு நடந்த தாக்குதலில், தவிசாளர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (5) கிளிநொச்சி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். மதுபோதையில் தன்னை நபர் ஒருவர் தாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் திருநகரை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் தரப்பிலிருந்து தமிழ்பக்கத்திடம் பேசிய ஒருவர்- “கைதான இளைஞன் ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்களால் தவசாளரை தாக்கியது உண்மைதான். எனினும், அதற்கான நிலைமை ஏன் உருவானது என்பதை கவனிக்க வேண்டும்.

அந்த இளைஞனிற்கு காணி இல்லை. கிராம அபிவிருத்தி சபை தலைவராகவும் வேழமாலிகிதனே செயற்படுகிறார். தனக்கு காணி ஒதுக்கித் தருமாறு நீண்டகாலமாக அந்த இளைஞன், வேழமாலிகிதனிடம் கோரி வருகிறார். காணி வழங்குவதாக அவர் பல முறை உறுதியளித்து வருகிறார். எனினும், வழங்கவில்லை. எனினும், அண்மையில் விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு காணி வழங்கியதாக இளைஞன் அறிந்துள்ளார். அது குறித்து வேழமாலிகிதனிடம் கேட்டுள்ளார். அது தர்க்கமாகியே தாக்கியுள்ளார்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here