எண்ணெய்க் கப்பலிற்கு இந்திய கடற்படை பாதுகாப்பளிக்கும்!

எம்டி நியூ டயமண்ட் எரிபொருள் கப்பல் இலங்கை கடற்பரப்பை விட்டு வெளியேறும்போது, இந்திய கடற்படை உதவியளிக்கும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் குறூப் கப்டன் இந்திக டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்கள், எண்ணெய்க் கப்பலை நெருங்குகி வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது, இலங்கை கடற்படையின் இரண்டு கப்பல்கள், எண்ணெய் கப்பலுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

தற்போது அரேபிய கடலை நோக்கி செல்லும் எண்ணெய் கப்பல், இலங்கையிலிருந்து 130 கடல் மைல் தொலைவில் உள்ளது. இன்னும் ஒரு நாளில் எண்ணெய் கப்பல் இலங்கை கடற்பரப்பை விட்டு வெளியேறி விடும்.

கடந்த செப்ரெம்பர் 3ஆம் திகதி சங்கமன்கந்தை கரையிலிருந்து 35 கடல் மைல் தொலைவில், என்ஜின் அறை வெடித்ததால் எண்ணெய் கப்பல் தீப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here