சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 700 ஆண்டு சிறைத்தண்டனை!

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பெண்ணொருவருக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று 700 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது கணவரிற்கு ஏற்கனவே 438 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒன்பது குற்றச்சாட்டில் லிசா மேரி லெஷர் என்பவரிற்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் மைக்கேல் லெஷருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் 438 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்கொட் ஆண்டர்சன்,”மேரி லெஷர் மீண்டும் ஒருபோதும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க மாட்டார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தப் போகிறோம்.” என்றார்.

அமெரிக்காவின் அலபாமாவின் பால்க்வில்லில் பல ஆண்டுகளாக அவர் இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த வழக்கு முதன்முதலில் 2007 இல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், பின்னர்  வழக்குத் தாமதப்படுத்தப்பட்டது. அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளின் பேரில் மாவட்ட சட்டத்தரணி ஸ்கொட் ஆண்டர்சன் இந்த வழக்கை மீண்டும் ஆரம்பித்தார்.

அவர் கூறினார்: “இது நான் கண்டிராத சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஒன்றாகும், இது எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதும், இந்த இரண்டு அரக்கர்களையும் நீதிக்கு கொண்டுவருவதற்கான வேலைக்கு நாங்கள் சென்றோம்.”

வழக்குத் தாமதம் காரணமாக, தனது அலுவலகம் ஆரம்பத்தில் இருந்தே முழு வழக்கையும் மீளமைக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here