வன்னிக் காடழிப்பிற்கு அரசே பொறுப்பு; கமாலின் கருத்து வேடிக்கையானது: சபா.குகதாஸ் கண்டனம்!

வன்னிக் காடுகளின் அழிவுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.
பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன வன்னிக் காடழிப்பு பற்றி தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2009 யுத்தத்திற்கு பின்னர் வன்னிப்பகுதியில் காடழிப்பு என்பது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு அடர்காடுகளுள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெறுமதியான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டு விட்டது.

2009 ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வனவளப் பகுதியினால் கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டதுடன் புதிய காடுகளும் உருவாக்கப்பட்டன அவைதான் இன்று அழிக்கப்பட்டுவரும் தேக்கம் காடுகள் முல்லைத்தீவில் பல ஏக்கர் தேக்கம் காடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் காடுகளை பாதுகாப்பதில் சிறப்பாக செயற்பட்டார்கள் என முன்னாள் ஐனதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றை கடந்த ஆட்சியில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் காடுகள் அழிப்பிற்கு பக்க பலமாக பொலிசார், இராணுவம்,  சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவர்கள் சார்ந்தவர்கள் தான் காரணம். 2010 முதல் அரசாங்கத்தின் ஆதரவு அதிகார பீடமே இதனை முன்நகர்த்துகின்றனர். கடந்த காலத்தில் வெட்டப்பட்ட பெரும்பாலான மரங்கள் தென்னிலங்கைக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளன. வடக்கில் பொலிஸ் இராணுவ பின்னனியில் உள்ளவர்கள் மரக்கடத்தலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆட்சிக் காலங்களில் வன்னியில் இருந்த அமைச்சரின் ஆதரவுடன் பல மரக்கடத்தல்கள் நடைபெற்றுள்ளன. ஆகவே வன்னிக் காடழிப்பு என்பது அரச அதிகாரத்தினை வைத்தே தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here