கம்பஹா ஆடைத்தொழிற்சாலை பணியாளரின் மகள் யாழில் தனிமைப்படுத்தல்!

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவரின் மகள், யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் நிலையில் அவர் உள்ளிட்ட இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் தொல்பொருட்திணைக்களத்தின் அரும்பொருட் காட்சியகத்தில் அந்த யுவதி பணிபுரிகிறார். அவரது தாய் கொரானா தொற்றுடன் தொடர்புடைய ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிகின்றார்.

இதன் பிரகாரம் குறித்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந் நிலையில் நாவலர் வீதியில் அமைந்திருக்கு தொல்பொருட்திணைக்களத்தில் பணிபுரிகின்ற பெண் தனது நண்பருடன் நேற்று முன்தினம் இரவு கம்பஹாவிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, அந்த பெண்ணின் தங்குமிடம் அமைந்துள்ள இடத்திலும் அவருடைய நண்பர் பணிபுரிகின்ற கோட்டைப் பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here