சம்பிக்கவின் சாரதிக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியான திலும் துசித குமாரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த சாரதி, கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று சரணடைந்திருந்தார்.

2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரசேதத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து, அவரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here