3வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலாபம் இளைஞன்!

இலங்கையில் இளைஞர் ஒருவர் மூன்றாவது தடவையாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவவ, தெனங்குரிய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரே மூன்றாவது முறையாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் புரிந்து வந்த நிலையில், ஓகஸ்ட் 18 ஆம் திகதி அவர் நாடு திரும்பினார். வெலிக்கந்தவில் தனிமைப்படுத்தப்பட்ட போது, கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு, வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.

குணமடைந்து அங்கிருந்து வெளியேறிய பின்னர், தெனங்குரிய பகுதியிலுள்ள வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டார்.

செப்டம்பர் 17 ஆம் திகதி கொரோனா அறிகுறிகளுடன் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு நடத்தப்பட்ட இரண்டாவது பிசிஆர் பரிசோதனையில், அவர் இரணடாவது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, இரணவில சிகிச்சை மையத்தில் அவர் சிகிச்சையளிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் அவர் வீட்டில் மீண்டும் சுயதனிமைப்படுத்தப்பட்டார். வீடு முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டது.

இருப்பினும், சுய தனிமைப்பட்டிருந்த போது, மூன்றாவது முறையாக நோய்வாய்ப்பட்டு, ஒக்டோபர் 02 அன்று சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இளைஞன் மூன்றாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானது தெரிய வந்தது.

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஒரு நபர் மூன்று முறை பாதிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here