கிளிநொச்சியில் விபத்து: மயிரிழையில் தப்பித்த இந்து மத குருக்கள்!

கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் அரச சொத்துக்களிற்கு சேதம் ஏற்பட்டதுடன் வாகனத்தில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக தப்பித்தனர்.

குறித்த விபத்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த வானின் முன்னுள்ள சக்கரத்தில் வாயு காற்று வெளியேறியமையால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் கிளிநொச்சி ஏ9வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. வீதியின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள் சேதமடைந்ததுடன் வீதி மின்விளக்கு கம்பமும் சேதமடைந்துள்ளது.

வாகனத்தில் பயணித்த இந்து மத தலைவர்கள் தெய்வாதீனமாக எவ்வித பாதிப்பும் இல்லாது தப்பித்துக்கொண்டனர். ஆயினும் வான் கடும் சேதங்களிற்கு உள்ளாகியுள்ளது. விபத்தினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மதிப்பீடு செய்து வருகின்றது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here