சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விளையாட்டு நிகழ்வு

சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு மன்னார் தபால் நிலையம் மற்றும் உப தபால் நிலையங்களை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(4) மதியம் 2 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் மன்னார் அஞ்சல் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

மன்னார் அஞ்சல் அலுவலக பிரிவுக்குட்பட்ட தபாலகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் , உத்தியோகஸ்தர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த விளையாட்டுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் ரெட்ன நாயக்க மற்றும் சிறப்பு விருந்தினராக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினேல்ட் கலந்து சிறப்பித்தார்.

விருந்தினராக சாவச்சேரி தாபால் அதிபர் இன்பராஜ் லெம்பேட் மற்றும்
யாழ்பாண தாபால் நிலைய காசாளர் -ஜெரோபா ,நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரும் திடீர் மரணவிசாரணை அதிகாரியுமான றொஜன் ஸ்ராலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் இறுதியில் நடை பெற்ற அணைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கிண்னங்கள் வழங்கப்பட்டதுடன் சர்வதேச அஞ்சல் தினத்தையிட்டி எதிர் வரும் 8 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் உத்தியோகஸ்தர்கள் இரத்ததானம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here