400 பெண்களின் விபரம் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளிற்கும் அனுப்பப்பட்டது!

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 400 பேரின் பெயர் விபரங்களை மத்திய சுகாதாரத்துறை நாட்டிலுள்ள அனைத்து மாகாண சுகாதார திணைக்களங்களிற்கும் அனுப்பி வைத்துள்ளது.

இதேவேளை, இந்த பட்டியல் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ளவர்கள், குறிப்பிட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அல்லது பொலிஸ் பிரிவில் வசித்தால் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களையும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இல்லங்களிற்கு வெளியில் பொலிஸ் காவலும் இடப்படுகிறது.

இதேவேளை, மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி, யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதிக்கு விடுமுறையில் வந்த இரண்டு யுவதிகளின் பெயரும் அந்த பட்டியலில் இருக்கவில்லையென கூறப்படுகிறது. எனினும், அந்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியதன் அடிப்படையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here