பற்றைக்காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு!

ஹேமதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீபிட்டிய பகுதியில் இரண்டு பெண்களின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். இறந்து பல நாட்களான நிலையில், பழுதடைந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (4) காலை சடலங்கள் மீட்கப்பட்டன.

வேட்டைக்காரர் ஒருவர் அமைத்த மின்சார வேலியில் சிக்கி பெண்கள் இறந்ததாக கருதப்படுகிறது. 60, 35 வயதானவர்களே உயிரிழந்துள்ளனர்.

இரண்டு சடலங்களும் சுமார் 150 மீற்றர் இடைவெளியில் பற்றைக்காடுகளிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

பெண்கள் உயிரிழந்ததும், வேட்டைக்காரர் அவற்றை மறைத்து வைத்துள்ளது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இரண்டு உடல்களும் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டன.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேமதகம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here