இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மீளவும் அமுல்!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று முதல் கண்டிப்பாக நடைமுறைப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று முதல் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

முகக்கவசம் அணியவும், கைகளை கழுவவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பெரிய கூட்டங்களுடன் கூடிய நிகழ்வுகள் சில மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுப்போக்குவரத்திலும் சுகாதார நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணி பேருந்துகளில் பயணக்க வேண்டும்.

புகையிரத நிலையங்களிற்குள் செல்பவர்கள் முகக்கவசத்துடன், கைகளை சுத்தப்படுத்தி சென்றாலே, உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here