இராணுவத்துடன் இணைந்து ஓட்டமாவடி பிரதான வீதியில் குப்பைகளை அகற்றல்

தேசத்தை சுத்தமாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் “சேர்ந்து காப்போம் கிழக்கை” என்னும் தொனிப்பொருளில் பாதையில் குப்பை போட வேண்டாம் என்னும் விசேட வேலைத் திட்டம் இடம் பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கிழக்கு மாகாண இராணுவனத்தினர் இணைந்து ஓட்டமாவடி பிரதான வீதியில் குப்பைகளை அகற்றி வடிகான்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, சித்தாண்டி இராணுவ முகாம் அதிகாரிகள், சமுக சேவையாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில், பிரதேச விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி மேம்பால சந்தியில் இருந்து ஆரம்பமான குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் பிரதான வீதியூடாக ஓட்டமாவடி பாலம் வரையும் மற்றும் ஓட்டமாவடி பொது சந்தையூடாக ஓட்டமாவடி தபால் நிலைய சந்திவரை இடம் பெற்றது.

வீதிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதை முழுமையாக நிறுத்தி, எமது நாட்டையும், பிரதேசத்தினையும் சுத்தமாக பேணுவது ஜனாதிபதியின் கொள்கைத் திட்டமாக இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்திற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பூரன ஆதரவினை வழங்கவுள்ளதாக சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here