வடமாகாண பிரீமியர் லீக் 2020 சம்பியனானது யாழ் அணி!

வடமாகாண பிரீமியர் லீக் 2020 வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இறுதிச் சுற்றில் யாழ் மற்றும் முல்லை அணியினர் மோதிக்கொண்ட இறுதிப்போட்டியில் யாழ்பாண அணி சம்பியனானது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் அணியினர் முதலில் துடுப்பட்டத்தினை தெரிவு செய்து ஆறு விக்கட்டுக்களைப் பறிகொடுத்து 191 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டனர்.

192 ஓட்டங்கள் என்கிற இமாலய ஓட்ட எண்ணிக்கையினை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பாட்டத்தை ஆரம்பித்த முல்லை அணி, மிகவும் மந்த கதியில் ஆடி, தொடர்சியாக பல இலக்குகளைப் பறிகொடுத்து 12.3 ஓவர்கள் நிறைவில் 53 ஓட்டங்களை மட்டுமே மொத்தமாகப் பெற்று தோல்வியினை தழுவிக்கொண்டது.

இதன் அடிப்படையில் 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ் அணி வெற்றி கொண்டது.

ஆட்டத்தின் நாயகன் மற்றும் தொடர் ஆட்ட நாயகனாக யாழ் அணி சார்பாக 52 ஓட்டங்களையும் மூன்று விக்கட்டுக்களையும் கைப்பற்றிய சூரியகுமார் அஜித் தெரிவுசெய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here