ஆடைத் தொழிற்சாலையிலிருந்து விடுமுறையில் வந்த இரண்டு யுவதிகள்: யாழில் 22 பேர் சுயதனிமைப்படுத்தல்!

புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் உள்ளிட்ட 22 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டியவில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் பணியாற்றிய மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய புங்குடுதீவை சேர்ந்த இரண்டு யுவதிகள் விடுமுறையில் வீடு திரும்பியதையடுத்து, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு யுவதிகளும் நேற்று விடுமுறையில் வீடு திரும்பியுள்ளனர். ஒரு யுவதியின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேரும், இன்னொரு யுவதியின் குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் மற்றும 2 யுவதிகள் என 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இன்று மாலை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த தகவலை வெளியிடுவதற்கு சுமார்30 நிமிடங்கள் முன்னர் தமிழ்பக்கம் வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொடர்பு கொண்டு வினவியபோது, புங்குடுதீவு பெண்கள் விடுமுறையில் வந்திருக்கவில்லையென மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here