யாழில் கரையொதுங்கிய சடலம்: காணாமல் போன தமிழக மீனவருடையதா?

காணாமல் போன தமிழக மீனவர் கார்சன்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, அல்லைப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் சடலம் கரையொதுங்கியுள்ளது.

இதேவேளை, தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடந்த புதன் கிழமை (30) கடலில் விழுந்து மாயமானார்.

புதன் கிழமை இரவு கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தீடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டு, கார்சன் என்ற மீனவர் படகிலிருந்து நிலை தடுமாறி நடுக்கடலில் விழுந்துள்ளார்.

காணாமல் போன தமிழக மீனவர் கார்சன்

கார்சனை தேடும் பணி வெற்றியளிக்கவில்லை. அவரது சடலமா இது என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here