மன்னாரில் தெய்வீக கிராம நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தெய்வீக கிராம நிகழ்வு’ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவசிறி இராமச் சந்திரக் குருக்கள் பாபுசர்மா கலந்து கொண்டார்.

இதன் போது ஆண்டாங்குளம் சிறி நாகபூசனி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் இருந்து மண்டபம் வரை இந்து எழுச்சி ஊர்வலம் இடம் பெற்றது.

இதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றதோடு சிறப்பு உரைகளும் இடம் பெற்றதோடு, பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கிராம மக்கள், பிரதேச செயலக அதிகாரிகள், அறநெறி பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here