வீட்டிலிருந்த எலிகளை விரட்டாததால் கணவனின் ஆணுறுப்பை கடித்த மனைவி!

படுக்கையறையில் ஓடித்திரிந்த எலியை அப்புறப்படுத்தவில்லையென்ற கோபத்தில் தனது கணவரின் ஆணுறுப்பை மனைவி கடித்துள்ளார். இதனால் மோசமாக பாதிக்கப்பட்ட கணவன், மோசமான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியாவின், கிட்வே நகரில் இந்த சம்பவம் நடந்தது.

ஆபிரகாம் முசொண்டா (52) என்பவரே பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகுபாவா (40) தமது வீட்டில் எலித் தொல்லை உள்ளதாகவும், எலியை அகற்றும்படி கணவனை வற்புறுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவதினத்தில் வீட்டுக்கு வந்தபோது, அவரது படுக்கையறையருகே எலிகளையும், எச்சத்தையும் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து கணவருடன் முரண்பட்டு, அவரது ஆணுறுப்பை ஒரே கடியாக கடித்துள்ளார்.

காப்பர் பெல்ட் மாகாணத்தின் துணை பொலிஸ் கமிஷனர் போத்வெல் நமுஸ்வா இது குறிதது தெரிவித்தபோது, இந்த ஜோடிக்கிடையிலான முரண்பாடு அதிகரித்து கிடைத்த முறைப்பாடுகளின்படி ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் வசிக்கும்படி ஆபிரகாம் முசொண்டாவும், முகுபாவாவும் பிரிக்கப்பட்டிருந்ததாகவும், அப்படியான நிலையிலும் அனர்த்தம் நிகழ்ந்து விட்டது என தெரிவித்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து முசொண்டா அவசர மருத்துவ சிகிச்சைக்காக கிட்வே  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here