திவுலப்பிட்டிய பெண் பணியாற்றிய ஆடைத்தொழிற்சாலை பூட்டு: 400 பேர் சுயதனிமைப்படுத்தல்!

திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அந்த பெண் பணியாற்றிய மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை, காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

இன்று காலை முதல், தொழிற்சாலையை காலவரையின்றி மூட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணியாற்றிய 400 ஊழியர்களும் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு மாதங்களில் உள்நாட்டிற்குள் பதிவான முதலாவது கொரோனா தொற்று இதுவாகும்.

பாதிக்கப்பட்ட பெண் சில நாட்களின் முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் தொற்றுடன் இருப்பது அறிய வந்தது.

கம்பஹா மருத்துவமனையின் 15 பேரும் தனிமைப்படுத்தப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர் எவ்வாறு தொற்றிற்குள்ளானார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here