இலங்கைக்குள் பெண்ணொருவருக்கு கொரோனா: பேரதிர்ச்சி!

திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

39 வயதான அவர், கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண் காய்ச்சலுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் கோவிட் 19 இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்படி, கம்பாஹா மருத்துவமனையின் சுமார் 15 ஊழியர்களும், அந்தப் பெண் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்களில் சுமார் 40 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அந்த பெண்ணுக்குஎவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.

அவருடன் நெருங்கிப் பழகியவர்களின் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி விழிப்புடன் இருக்குமாறு அரசு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here