இயக்கச்சியில் 12 விவசாயிகளை கைது செய்த வனவள திணைக்களம்!

இயக்கச்சி கோவில் வயல் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலரால் வழங்கப்பட்ட காணி உரித்து ஆவணங்களுடன் (போமிட்) வயல் விதைப்பில் ஈடுபட்டிருந்த இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த 12 விவசாயிகளை சுண்டிக்குளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வயல் விதைப்பில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள், அவர்கள் பாவித்த உபகரணங்கள், தொலைபேசிகளையும் பறிமுதல் செய்து அவர்களை அறிவியல் நகர்ப் பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.

நேற்று (3) இந்த சம்பவம் நடந்தது.

கொண்டுசெல்லப்பட்டவர்கள் மாலை நான்கு மணியாகிய நிலையில் விடுதலை செய்யப்படவும் இல்லை. பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவும் இல்லை என்பதால் பதற்றமடைந்த அவர்களது உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டமைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா ஆகியோர் அறிவியல்நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் திணைக்கள பிரதான அலுவலகத்திற்கு சென்ற பொழுது கைது செய்யப்பட்டவர்கள் அலுவலகத்தில் இருத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் கைது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் வினவிய பொழுது அதற்கு பதிலளிக்க கூடியவாறான பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்கவில்லை. அங்கிருந்த தமிழ் பேசும் உத்தியோகத்தர்களிடம் வினவிய பொழுது அதற்கான பதிலை தர மறுத்ததுடன் பாராளுமன்ற உறுப்பினருடன் அனாகரீகமான முறையில் நடந்தும் கொண்டனர்.

இன் நிலையில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது இவர்கள் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட வேண்டும் என சிறீதரன் கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை.

இதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட வேண்டும் இல்லை எனில் இவ் இடத்தை விட்டு செல்ல முடியாது என பாராளு மன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களது அலுவலக வாயிலில் அமர்ந்து கொண்டார்.

இதன் பின்னர், கைது செய்யப்பட்ட 12 பேரையும் அவர்களது உடமைகளையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 6 மணியளவில் முற்படுத்தியிருந்தனர். இவர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த இருப்பதாக கிளீநொச்சி பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here