மனைவி, 2 பிள்ளைகள், 2 மருமக்களை வெட்டிக்கொன்ற யாழ்ப்பாண தந்தை: பிரான்ஸில் கோரம்!

பிரான்ஸின் பாரிஸ் புறநகர் பகுதியொன்றில் நேற்று நடந்த கொலை சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த குடும்பம் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதி நொய்ஸி-லெ-செக் (சீன்-செயிண்ட்-டெனிஸ்) இல் நடந்த இந்த சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் பற்றி பாரிஸ் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கையயைச் சேர்ந்த நடுத்தர வயது மிக்க தந்தை ஒருவர் தனது மனைவி, 5 வயது, 18 மாதங்களேயான பிள்ளைகளையும் படுகொலை செய்ததுடன் அவ்வீட்டில் இருந்த மருமக்களான 5 வயது, 9 வயதுப் பிள்ளைகளையும் படுகொலை செய்துள்ளார்.

இக்கொலைகளுடன் சம்பந்தப்பட்ட நபர் பற்றி ஏற்கனவே பொலிஸில் புகார் செய்யப்பட்டும் இருந்துள்ளது. பொலிஸார் இந்நபர் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டும் இருந்தனர். இவ்வளவு கொடூரமான முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினர் யாழ் சண்டிலிப்பாயயைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினம் அவர்கள் நேறைய தினம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடித்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட நபர் இக்கொடூரத்தை மேற்கொண்டிருந்த வேளை வீட்டிச் யன்னல் வழியாக் ஏறிக் குதித்து தப்பி வெளியே சென்ற 13 வயதுச் சிறுவன் அருகில் இருந்த கபே ஒன்றிற்குள் சென்று உதவி கோரியதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உதவி கோரச் சென்ற சிறுவன் தங்களது மாமா பைத்தியம் பிடித்தவராக தங்களைத் தாக்குவதாக தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்த மேலும் 3 பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here