மாத்தளனில் வாடி எரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளன் பகுதியில் இரண்டு மீனவர்களின் வாடிகள் எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளன் பகுதியில்
மாத்தளன் கடற்கரைப் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கின்ற அ.றோயன், டிலக்சன் ஆகியோரின் வாடிகளுக்கு இன்று மாலை 3 மணியளவில் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

வாடிகள் இரண்டும் முற்றுமுழுதாக எரிந்து தீக்கிரையாகி உள்ளதோடு குறித்த வாடிகளில் இருந்த சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here