இன்று 4 பேருக்கு கொரோனா!

இன்று இதுவரையான காலப்பகுதியில் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,392 ஆக உயர்ந்துள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய இருவர், கட்டாரிலிருந்து திரும்பிய ஒருவர், அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் வந்த இந்தியர் ஆகியோர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

22 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 125 நபர்கள் நாடு முழுவதும் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மூன்று வெளிநாட்டினர் உட்பட மேலும் ஒன்பது பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,254 ஆக உயர்ந்துள்ளது.

39 பேர் கொரோனா சந்தேகத்தில் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here